30 வருடத்துக்கு முன்னர் டயானா செய்ததை அப்படியே செய்த இளவரசர் ஹரி.. கண்கலங்கிய நெகிழ்ச்சி தருணம்

Report Print Raju Raju in பிரித்தானியா
666Shares

பிரித்தானிய இளவரசர் ஹரி, குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு தனது தாயின் புகைப்படங்களை கண்டு நெகிழ்ச்சியடைந்து ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசி டயானா தனது மனிதநேய செயலுக்கு பெயர் போனவர், அதிலும் முக்கியமாக குழந்தைகள் மீது மிகுந்த கரிசனம் கொண்ட டயானா அடிக்கடி குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று நோயாளி குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்திருக்கிறார்.

இந்நிலையில் டயானா கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Sheffield-ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த குழந்தைகளை பார்த்தார்.

அதே போல சமீபத்தில் அவரின் மகனும், இளவரசருமான ஹரி அதே மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளிடம் பரிவோடு பேசினார்.

இதையடுத்து தாய்க்கும், மகனுக்கும் இந்த விடயத்தில் பல ஒற்றுமைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து டயானா அங்கு வரும் போது செவிலியராக இருந்த ஜூலி கூறுகையில், டயானா வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு தான் உள்ளே வந்தார், அதே போல ஹரியும் செய்துள்ளார்.

ஒவ்வொரு படுக்கை அருகிலும் சென்று குழந்தைகளிடம் டயானா விசாரிப்பார், அதே பாணியில் தான் ஹரியும் செய்தார் என கூறினார்.

இதனிடையில் டயானா இந்த மருத்துவமனைக்கு வந்திருந்த போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை ஹரி பார்த்தார்.

தாயின் புகைப்படத்தை பார்த்து ஹரி நெகிழ்ச்சியடைந்ததை காண முடிந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்