பிரித்தானிய கப்பல்களை காக்க கடற்படை: பதவியேற்ற முதல் நாளே புதிய பிரதமர் அதிரடி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
470Shares

பிரித்தானியாவின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனை, டிரம்பின் பட்லர் என ஈரான் கேலி செய்துள்ள நிலையில், பதவியேற்ற முதல் நாளே பிரித்தானிய கப்பல்களை பாதுகாக்க கடற்படையின் கப்பல்கள் களத்தில் இறங்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் போரிஸ்.

அவர் சொன்னதோடு நிற்காமல் செயலிலும் இறங்கிவிட்டதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்று நிரூபித்துள்ளது.

Stena Important மற்றும் Sea Ploeg என்னும் இரண்டு கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையின் HMS Montrose என்னும் போர்க்கப்பல் களமிறங்கியுள்ளதை அந்த வீடியோவில் காணலாம்.

சென்ற வாரம் ஈரான் கமாண்டோக்கள் ஹெலிகொப்டர் ஒன்றில் வந்திறங்கி, பிரித்தானிய கொடியைக் கொண்ட Stena Impero என்னும் எண்ணெய்க் கப்பலை கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சன், அனைத்து பிரித்தானிய கப்பல்களும் ஒன்று அல்லது ஒரு கூட்டம் போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர், தங்கள் பயணம் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் பிரித்தானிய கொடி தாங்கிய அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.

HMS Montrose என்னும் போர்க்கப்பலுடன் HMS Duncan என்னும் கப்பலும், கடல் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் மேலும் நான்கு கப்பல்களும் ஜலசந்திக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் Tobias Ellwood, அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது இயலாத காரியம் என்று இந்த வார துவக்கத்தில்தான் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்