இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவானின் தந்தைக்கு நீதிமன்றம் விதித்த அதிகபட்ச சிறை தண்டனை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
70Shares

சிறார்களை சீரழித்த விவகாரத்தில் இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவானின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 79 வயதாகும் அந்த நபர் கடந்த 1070 முதல் 1980 வரையான காலகட்டத்தில் சிறார்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலரை சீரழித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்ட காரணங்களுக்காக பெயர் மற்றும் புகைப்படங்கள் ஏதும் அந்த நபர் தொடர்பில் வெளியிடப்படவில்லை.

6 வயது சிறுமி முதல் பல இளம்பெண்களை அவர் தமது செல்வாக்கை பயன்படுத்தி சீரழித்துள்ளார்.

சுரங்க ரயில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்ற இவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவரால் பாதிக்கப்பட்ட பெண் பொலிசாரை நாடியதாகவும், ஆனால் எவரும் நம்பாத காரணத்தால் அவர் இந்த விவகாரத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொருவர் தமக்கு ஏற்பட்ட துயரத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய நிலையில், அவர் மீது பொலிசார் வழக்குப் பதிந்ததாக தெரியவந்துள்ளது.

இவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்குப் பதிய்யப்பட்டு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பெருமை வாய்ந்த பிரீமியர் லீக் ஆட்டங்களில் பல ஆண்டுகளாக சாதனை படைத்த கால்பந்து ஜாம்பவனான இவரது மகன், தந்தையின் சிறை தண்டனை தொடர்பில் இதுவரை கருத்தேதும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்