தாயின் சடலத்தை 3 வருடங்களாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மகள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

வேல்ஸ் நாட்டில் திருமணமாகாத பெண் ஒருவர் மூன்று வருடங்களாக தன்னுடைய தாயின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்திருத்துள்ளார்.

கெய்னர் ஜோன்ஸ் (83) என்கிற பெண் தன்னுடைய கணவர் 2012ம் ஆண்டு இறந்த பிறகு, மகள் வேலரி உடன் வேல்ஸ் நாட்டின் Ceredigion பகுதியில் குடியேறியுள்ளார்.

கடந்த ஆண்டு இவர்களுடைய வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது வேலரி, நீரிழப்பு நோய் காரணமாக மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றிருக்கின்றனர்.

பொலிஸார் நுழைய முடியாத அளவிற்கு வீடு முழுவதும் குப்பைகளால் நிறைந்திருந்துள்ளது. உள்ளே சென்ற போது குப்பைகள் மற்றும் மனித சிறுநீருக்கு மத்தியில் கெய்னர் ஜோன்ஸ் சடலம் கிடப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.

இதுகுறித்து பொலிஸார் வேலரியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் எப்பொழுது இறந்தார் என்பது அவருக்கு தெளிவாக தெரியவில்லை. புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த பலகை அவரது மேல் விழுந்ததால் உயிரிழந்தார் என வேலரி கூறினார்.

ஆனால் அவர்களுடைய வீட்டில் அந்த பலகை இருந்ததற்கான தடயம் எதுவும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜோன்ஸ் உடலை பதப்படுத்துவதற்காக 2015 மற்றும் 2016ம் ஆண்டுகள் 4 உப்பு பாக்கெட்டுகளை வேலரி வாங்கியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த அதிகாரிகள், வேலரி கொலை செய்ததற்கான எந்த தடயமும் கிடைக்காததால், அவரை மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு அவர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுவார் என கூறியுள்ளனர்.

அதேசமயம் இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்த காரணத்திற்காக குற்றத்தை எதிர்கொள்வார் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்