பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே ஏற்பட்ட கார் விபத்தில் இளம்பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 8.20 மணியளவில் பக்கிங்காம் அரண்மனை மற்றும் கிரீன் பார்க் இடையே நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் மோசமான கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில் அந்த இளம்பெண்ணின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் காரின் முன் பகுதியும் அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது.
ராணியின் மத்திய லண்டன் வீட்டிற்கு வெளியே தரையிறங்கிய ஏர் ஆம்புலன்ஸ், இளம்பெண்ணை உடனடியாக மருத்துவனைக்கு எடுத்துச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸார் எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.