போரிஸிடம் மோசமாக பேசிய ராணி.. பொதுவில் பகிர்ந்து ஊழியர்களிடம் திட்டு வாங்கிய புதிய பிரதமர்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா ராணி, போரிஸ் ஜான்சனை புதிய பிரதமராக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது தனிப்பட்ட சந்திப்பின் போது ராணி அவரிடம் கூறி ரகசியத்தை பொதுவில் வெளிப்படுத்தியுள்ளார், இதன் விளைவாக போரிஸ் ஜான்சனை ஊழியர்கள் திட்டியுள்ளார்.

இன்று காலை போரிஸ் ராணியுடனான சந்திப்புக்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார், தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை ராணியிடம் கையளித்த பின்னர், போரிஸை அரசாங்கத்தை அமைக்கச் ராணி அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, லண்டன், 10 டவுனிங் ஸ்டீரிட்டில் உள்ள அதிகார்ப்பூர்வ பிரதமர் இல்லத்திற்கு வந்த 52 வயதான போரிஸ், பிரித்தானியா பிரதமராக முதல் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அப்போது பேட்டியளித்த புதிய பிரதமர் போரிஸ், ராணியுடனான அவர்களின் குறுகிய சிந்திப்பின் போது, ராணி ஒரு மோசமான நேர்மையான கருத்தை தெரிவித்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த வேலைக்கு ஏன் வேறு யாராவது தேர்வு செய்யப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை என ராணி சொன்னதாக போரிஸ் கூறியுள்ளார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் போரிஸிடம், அந்த விஷயங்களை மிகவும் சத்தமாக மீண்டும் கூற வேண்டாம் என்று கூறி திட்டியுள்ளனர். மேலும், ராணி கூறும் ரகசியங்களை பொதுவில் பகிர கூடாது என அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்