சிறுநீரக கல் வலி ஏற்படுத்துவதாக எண்ணி மருத்துவமனை சென்ற பெண்: குழந்தையுடன் வீடு திரும்பிய ஆச்சரியம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனக்கு சிறுநீரக கல் இருப்பதால் வலி ஏற்படுவதாக எண்ணி மருத்துவமனைக்கு சென்ற ஒரு பெண், குழந்தை பெற்று வீடு திரும்பிய ஆச்சரிய நிகழ்வு பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளது.

ஏழு குழந்தைகளின் தாயான Cheltenhamஐச் சேர்ந்த Saffron Snow (33)க்கு ஒரு நாள் அடிவயிற்றில் வலி ஏற்பட்டது.

அவருக்கு சிறுநீரக கற்கள் இருந்ததால், ஒரு வேளை அதனால் வலி ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய Saffron, தனது கணவர் Josh (30)இடம், பின்னர் வருமாறு கூறிவிட்டு, தான் முதலில் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்.

ஒருவேளை குடல்வால் அழற்சியாக கூட இருக்கலாம் என்று எண்ணிய நர்ஸ் ஒருவர், Saffronஇன் அடிவயிற்றை ஸ்கேன் செய்ய, கடவுளே என ஆச்சரியத்தில் அலறினார்.

காரணம் ஒரு பெரிய தொப்புள் கொடியுடன் நன்கு வளர்ந்த ஒரு குழந்தை Saffronஇன் கர்ப்பப்பை வாயில் காணப்பட்டது.

Saffronக்கு ஏற்பட்ட வலி, சிறு நீரகக் கற்களால் ஏற்பட்டதல்ல, அது பிரசவ வலி!

20 நிமிடங்களில் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் Saffron.

Saffronஇன் கணவர், அவசர சிகிச்சைப் பிரிவில் போய் மனைவியை தேடி, காணாமல், என்ன ஆயிற்று என்று மருத்துவமனை முழுதும் தேட, அவரது மனைவியோ கையில் ஒரு அழகான ஆண் குழந்தையுடன் பிரசவ வார்டில் இருப்பதைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார்.

ஒரு பக்கம், தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த நிலையில், Saffronக்கு இதற்கு முன்னர் பிறந்த குழந்தைகளில், நான்கு அறுவை சிகிச்சை மூலம்தான் பிறந்தது என்பதோடு, இனி சுகப்பிரசவம் நடப்பதால் அவருக்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கூறப்பட்டிருந்ததால், அவருக்கு சற்று பயம் ஏற்பட்டுள்ளது.

என்றாலும் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கு தெரியாதது கூட நல்லதுக்குத்தான் போலும், ஏனென்றால் எட்டாவது குழந்தை அவருக்கு சுகப்பிரசவத்தில்தான் பிறந்துள்ளது.

குழந்தையின் உடல் நலம் எப்படி இருக்குமோ என Saffron கவலைப் பட்ட நிலையில், அவர் அழகான, ஆரோக்கியமான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க, அதற்கு ஆர்தர் என பெயரிட்டுள்ளனர் Saffron, Josh தம்பதி...

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்