பிரித்தானிய எண்ணெய்க் கப்பலில் சிக்கியுள்ளவர்கள் குறித்த சமீபத்திய செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஈரான் கைப்பற்றிய எண்ணெய்க் கப்பலில் இருக்கும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக, கப்பலின் கேப்டன், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எண்ணெய்க் கப்பலான ஸ்டெனோ இம்பீரோ, ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்டெனா பல்க் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

ஸ்டெனா பல்க் நிறுவனம், இன்று ஸ்டெனோ இம்பீரோ கப்பலின் கேப்டனிடம் பேசியதை உறுதி செய்துள்ளது.

கப்பலில் இருக்கும் ஈரான் அதிகாரிகளுக்கு கப்பல் பணியாளர்கள் ஒத்துழைப்பு அளிப்பதாகவும், அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று ஹார்மூஸ் ஜலசந்தியில் பிடிபட்ட எண்ணெய்க் கப்பலான ஸ்டெனோ இம்பீரோவிலிருந்த 23 பணியாளர்களும், ஈரான் ராணுவத்தினரின் பிடியில் உள்ளனர்.

இதற்கிடையில், கப்பலையும் பயணிகளையும் விடுவிக்கும் முயற்சியில், பேச்சு வார்த்தை நடத்துவதற்காக, மத்தியஸ்தர் ஒருவரை பிரித்தானியா ஈரானுக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இத்தனை நாட்கள் உரசல்களுக்குப்பின், இன்று, ஸ்டெனோ இம்பீரோ பிடிபட்ட அதே ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக பிரித்தானிய கொடி தாங்கிய கப்பல் ஒன்று முதன்முறையாக கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்