பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்த துர்நாற்றம் வீசும் 100 கண்டெய்னர்கள்: திறந்தபோது கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 111 கண்டெய்னர்களிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அவற்றைத் திறந்தபோது, அவற்றில் சவக்கிடங்கு மற்றும் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உடல் பாகங்கள் உட்பட ஏராளமான அபாயகரமான பொருட்கள் நிரம்பி வழிவது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கண்டெய்னர்களை பிரித்தானியாவுக்கே திருப்பி அனுப்ப இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அவை மறுசுழற்சிக்கான உலோகப்பொருட்கள் என்ற பெயரில் பொய்யாக இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கண்டெய்னர்களை இறக்குமதி செய்த ஒருவர், அவற்றில் 111 கண்டெய்னர்களை அநாதரவாக விட்டுச் சென்றுள்ளதாகவும், அவற்றிலிருந்து மோசமான துர்நாற்றம் வீசுவதாகவும், கொழும்பு துறைமுகம் புகாரளித்ததையடுத்து, விசாரணையில், இந்த மோசமான வேலை 2017இலிருந்தே நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

2017இலிருந்து 241 கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 130 மறு சுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை செய்தி தொடர்பாளரான Sunil Jayaratne தெரிவித்தார்.

துறைமுகத்தில் அநாதரவாக விடப்பட்டுள்ள அந்த 111 கண்டெய்னர்களையும் மீண்டும் திருப்பி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் துறைமுகத்திலிருந்து அகற்றப்பட்டு விட்ட 130 கண்டெய்னர்கள் தொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் பிற சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

இந்த கண்டெய்னர்களை இறக்குமதி செய்த இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், அவற்றை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பாவிட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் Jayaratne.

அத்துடன் சுங்கத்துறைக்கு பொறுப்பான நிதி அமைச்சக அலுவலர் ஒருவர், அபாயகரமான பொருட்களை, இலங்கையின் ஒப்புதல் இல்லாமலே ஏற்றுமதி செய்ததற்காக, நிதி அமைச்சகம் இந்த பிரச்சினையை பிரித்தானிய அதிகாரிகளிடம் கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்