பிரித்தானியாவின் புதிய பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு குறித்தும் வெளியான தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள போரிஸ் ஜான்சனின் சொத்து மதிப்பு மற்றும் அவர் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

போரிஸ் ஜான்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கவுள்ளார்.

அவர் குறித்து பலரும் அறியாத தகவல்கள்,
  • போரிஸ் ஜான்சனின் முழு பெயர் அலெக்சாண்டர் போரிஸ் டி பிபில் ஜான்சன். அவரின் இரண்டாவது மனைவி மரினா வீலர் தாயின் பூர்வீகம் இந்தியா!
  • பிரித்தானிய பெற்றோருக்கு நியூயோர்க் நகரில் பிறந்த போரிஸ் ஜான்சன், கல்வி பயின்றது எல்லாம் பிரித்தானியாவில் தான்.
  • எம்.பியாக முதன் முதலாக 2001ஆம் ஆண்டில் பதவியேற்ற போரிஸ், லண்டன் மேயராக 2008ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். போரிஸின் மொத்த சொத்து மதிப்பு £1.6 மில்லியன் என Celebrity Net Worth இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது Uxbridge and South Ruislip தொகுதி எம்.பியாக இருக்கும் போரிஸின் ஆண்டு சம்பளம் £79,468 ஆகும். பிரதமர் ஆனவுடன் அவரின் சம்பளம் £150,402 ஆக உயரும் என FullFact பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • போரிஸ் சர்ச்சை நாயகனாகவே வலம் வருகிறார் என கூறினால் அது மிகையாகாது! ஓரினச்சேர்க்கை உரிமைகள் குறித்து அவர் அளித்த பேட்டி, 2011 இல் லண்டன் கலவரத்தின் போது அவர் நகரத்திலில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தது போன்ற விடயங்கள் பலத்த சர்ச்சையை கிளப்பியது.
  • அக்டோபர் 31 க்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதாக போரிஸ் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும் ஐரோப்பியன் யூனியனில் இருந்து பிரித்தானியா எப்படியும் வெளியேறும் என அவர் உறுதியளித்துள்ளார்.
  • 2016 பிரெக்சிட் வாக்கெடுப்பின் முகமாக பார்க்கப்படும் போரிஸ், அது தொடர்பான பிரச்சாரத்தின் மூலமாகவே பிரபலமடைந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்