இரண்டு மனைவிகள்! மகள் வயது பெண்ணுடன் காதல்.. பிரித்தானிய புதிய பிரதமர் குறித்த அதிரவைக்கும் தகவல்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள போரிஸ் ஜான்சனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரியவந்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் செய்யப்பட்டுள்ளார் போரிஸ் ஜான்சன் (55).

மகாராணியை சந்தித்து இன்று அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

போரிஸ் கடந்த 1987ஆம் ஆண்டு அலிக்ரா மோஸ்டின் ஓவன் என்ற பெண்ணை மணந்தார். பின்னர் 1993ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து அடுத்த சில வாரங்களில் மரினா வீலர் என்ற பெண்ணை இரண்டாவதாக போரிஸ் மணந்தார்.

திருமணத்துக்கு முன்னரே மரினா கர்ப்பமாக இருந்த நிலையில் அடுத்த ஐந்தாவது வாரத்தில் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.

இதன்பின்னர் போரிஸுக்கு மேலும் 4 குழந்தைகள் பிறந்தது. போரிஸின் நான்கு குழந்தைகள் அவரின் மனைவிக்கு பிறந்தது.

இன்னொரு குழந்தை அவர் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு பிறந்தது. போரிஸுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்க படுவது உண்டு.

கடந்த 2006-ல் போரிஸுக்கு பிரபல பத்திரிக்கையாளர் அன்னா பசக்கர்லியுடன் தொடர்பு உள்ளதாக முன்னணி பத்திரிக்கையான நியூஸ் ஆப் தி வேல்ட் செய்தி வெளியிட்டது.

இதனிடையில் கடந்த 2018 செப்டம்பர் மாதம் போரிஸும், அவர் இரண்டாவது மனைவி மரினாவும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், நாங்கள் சில காலமாகவே பிரிந்து வாழ்கிறோம், இருவரும் விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என கூறப்பட்டிருந்தது.

இதனிடையில் தற்போது கேரி சைமண்ட்ஸ் என்ற இளம் பெண்ணை போரிஸ் காதலித்து வருகிறார் என தெரியவந்தது.

போரிஸின் மகள் லாரா (26) வை விட கேரி ஐந்து வயது மட்டுமே பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்