பிரதமராக கடைசி தருணம்..! புதிய பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த மே.. அழகிய பரிசுகளுடன் பிரியாவிடை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தனது கடைசி கூட்டத்தில் கலந்துக்கொண்ட தெரசா மேவிற்கு அமைச்சரவை அழகிய பரசுகள் கொடுத்து பிரியாவிடை அளித்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராகவும் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பிரித்தானியா ராணியை நேரில் சந்திக்க உள்ள போரிஸ், தனது அமைச்சரவை பட்டியலை ராணியிடம் சமர்ப்பிக்க உள்ளார்.

அதே சமயம், தெரேசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகுவார். டவுனிங் ஸ்ட்ரீடில் நடந்த தனது கடைசி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்ட மே, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் ஜான்சனை வாழத்தினார். பின்னர், பிரித்தானியாவிற்கு ஆதரவாக பிரெக்ஸிட்டை வழங்க வேண்டும் என புதிய தலைவருக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

பிரித்தானியாவுக்கு ஆதரவாக பிரெக்ஸிட்டை வழங்குவதற்கும், எதிர்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பினை அரசாங்கத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கும் நாம் இப்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு தனது முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும் என புதிய பிரதமர் போரிஸிடம் தெரசா மே உறுதியளித்துள்ளார்.

விடைபெறும் பிரதமர் தெரசா மே-விற்கு, 650 பவுண்ட் மதிப்புள்ள ஒரு கருப்பு கைபை மற்றும் 495 பவுண்ட் மதிப்புள்ள நெக்லஸ் பிரியாவிடை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்