குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு பிறந்த நாள்: தாய் கேட் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நேற்றுதான் கையில் குழந்தையுடன் பிரித்தானிய இளவசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும், புனித மேரி மருத்துவமனை வாசலில் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது போலிருக்கிறது, இன்று அந்த குழந்தைக்கு வயது ஆறு!

இந்த சந்தர்ப்பத்தில் இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜார்ஜின் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

குட்டி இளவரசர் ஜார்ஜின் பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் நேற்று கென்சிங்டன் மாளிகை வெளியிட்டுள்ள மூன்று புகைப்படங்களையும் அவரது தாய் இளவரசி கேட்டே எடுத்துள்ளார்.

கென்சிங்டன் மாளிகை வெளியிட்ட அந்த புகைப்படங்களுடன், ’His Royal Highness அவர்களின் ஆறாவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள் ஆகியோர், இளவரசர் ஜார்ஜின் மூன்று புதிய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்’ என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

இளவரசர் ஜார்ஜ் அணிந்திருக்கும் இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் சீருடையைப் போன்ற சட்டையைப் பார்க்கும்போது, தனது தந்தையைப் போலவே அவரும் கால்பந்தாட்டப் பிரியர் என்பது நன்றாக தெரிகிறது.

மகாராணியாரின் பேரனின் குழந்தையான ஜார்ஜ், பிரித்தானியாவில் இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்குப் பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய மூன்றாவது முடிக்குரிய இளவரசர் ஆவார்.

இன்னொரு முக்கிய விடயம், மகாராணியார் தனது பேரன் தன்னுடன் தங்கும்போது, அவர் கண் விழிக்கும் முன்னரே, அவரது கால் அருகே தனது பரிசுப் பொருட்களை தயாராக வைத்திருப்பாராம்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers