தனது சொந்த இரத்தத்தை சுமந்து செல்லும் பிரித்தானிய மகாராணி: ஒரு அபூர்வ செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது சில அசாதாரண பொருட்களை பிரித்தானிய மகாரணியார் தன்னுடன் சுமந்து செல்ல வேண்டும்.

மகாராணியார் மட்டுமின்றி, அனைத்து ராஜ குடும்ப உறுப்பினர்களுமே தாங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது சில பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லவேண்டும்.அவற்றில் ஒரு கருப்பு நிற உடையும் அடங்கும்.

இதற்கு காரணம் என்னவென்றால், ஒரு வேளை ராஜ குடும்பத்தார் வெளிநாட்டில் இருக்கும்போது, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரவது இறந்துவிட்டால், அவர்கள் துக்கத்தின் அடையாளமாக அந்த உடையை அணிந்து வர வேண்டும்.

சொல்லப்போனால், 1952ஆம் ஆண்டு அப்படி ஒரு துயர சம்பவம் நடந்தது. மகாராணியார் கென்யாவுக்கு சென்றிருந்தபோது அவரது தந்தையார் இறந்துபோனார். இதுபோக இன்னொரு முக்கிய விடயத்தையும் மகாராணியார் தன்னுடன் கொண்டு செல்ல வேண்டும்.

அது... அவர்களுடைய சொந்த இரத்தம்...

மகாராணியாரானாலும் சரி, இளவரசர் சார்லசானாலும் சரி, வெளிநாடு புறப்படும்போது, அரசின் கப்பற்படை மருத்துவர் அவர்களது இரத்தத்தை சேகரித்து அவர்களிடமே கொடுப்பார்.

இது எதற்கு என்றால், அவர்கள் வெளி நாடு சென்ற இடத்தில், அவர்களுக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இந்த இரத்தம் ஏற்றப்படும்.

அதாவது உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்களுக்கான அவசர சிகிச்சை மகாராணியாருக்கும் இளவரசருக்கும் கிடைக்கும்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்