பிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி மனைவி... அவருக்கு வந்த அதிர்ச்சி செய்தி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியவை சேர்ந்த காவலர் ஒருவர் ஸ்காட்லாந்துக்கு மகனுடன் சுற்றுலா சென்ற போது திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் ஷாசத் சாதிக் (38). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாதிக்கின் மனைவி மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

இதனிடையில் தனது 13 வயது மகனுடன் சாதிக் ஸ்காட்லாந்தின் Fairy Pools என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றார்.

அங்கு சாதிக் மற்றும் அவர் மகன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை கேட்டு அவரின் கர்ப்பிணி மனைவி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

கணவர் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த அவருக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்தது.

சாதிக்கின் மரணத்தில் சதி வேலைகள் ஏதும் இருப்பதாக கருதவில்லை என ஸ்காட்லாந்து பொலிசார் கூறியுள்ளார்.

நேர்மையான காவலராக பணியாற்றிய சாதிக்குக்கு அவர் குடும்பத்தார் புகழாஞ்சலி சூட்டியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், சாதிக் தன்னலமற்ற மனிதராக திகழ்ந்தார், மற்றவர்களுக்கு உதவி செய்வது என்றால் அவருக்கு அலாதி பிரியம்.

அவர் இளம்வயதிலேயே பலவற்றை சாதித்துள்ளார், நாங்கள் அவரை நினைத்து பெருமைப்படுகிறோம்.

சாதிக் எப்போதும் எங்கள் மனதில் இருப்பார், அவரை என்றும் மறக்க முடியாது என உருக்கமாக கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers