லண்டன் கணவருக்கு தெரியாமல் £600,000 பணத்தை மறைக்க வேறு நபரை நாடிய மனைவி... நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கணவருக்கு தெரியாமல் £600,000 பணத்தை நண்பர் என நம்பி ஒருவரிடம் மனைவி கொடுத்த நிலையில் அந்த பணத்துடன் அந்த நபர் நாட்டை விட்டே ஓட்டம் பிடித்துள்ளார்.

லண்டனை சேர்ந்தவர் டானி . இவர் மனைவி சாரா பைரின். கடந்த 2017-ல் சாராவுக்கு அவர் தந்தையின் தொழில் மூலம் £600,000 பணம் கிடைத்தது.

ஆனால் பணத்தை கணவருக்கு கொடுக்க மனமில்லாத சாரா கட்டிட தொழில் மூலம் நண்பரான ஸ்டீபன் ஹோவியிடம் தனது கணவரை தான் விவாகரத்து செய்ய போவதாக கூறினார்.

மேலும் அந்த பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு தான் கேட்கும் போது திருப்பி கொடுத்துவிடுமாறு கூறினார்.

பின்னர் சில மாதங்கள் கழித்து கணவர் டானியின் நல்ல மனதை புரிந்து கொண்ட சாரா, கணவரிடம் அனைத்து பணத்தையும் கொடுக்க முடிவு செய்து அது குறித்து அவரிடம் சொன்னார்.

இதையடுத்து ஸ்டீபனை தொடர்பு கொண்ட சாரா தனது பணத்தை திருப்பி தர கூற, ஸ்டீபனோ பணத்தை முதலீடு செய்து விட்டதால் தற்போது கொடுக்க முடியாது என கூறிவிட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாரா இது குறித்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் சாராவிடம் வாங்கி பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் ஸ்டீபன் பிரித்தானியாவை விட்டு ஜப்பானுக்கு தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து அவரை தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...