ரயில் முன் பாய்ந்த சிறுவன்: இறப்பதற்குமுன் தன் மரணத்துக்கு காரணமானவர்கள் குறித்து கொடுத்த ரகசிய குறியீடுகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த பிரித்தானிய சிறுவன், தான் இறப்பதற்குமுன், தனது மரணத்துக்கு காரணமான இருவரின் பெயர்களை குறித்து ரகசிய குறியீடுகளைக் கொடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sam Connor (14) என்ற அந்த சிறுவன், ஒரு காகிதத்தில் தனது போனை பயன்படுத்துவதற்கான பாஸ்வேர்டு மற்றும் சில தகவல்களை எழுதிக் கொடுத்து விட்டு ரயில் முன் பாய்ந்ததாக தெரியவந்துள்ளது.

அந்த குறிப்பில் இரண்டு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது அவை வெளியிடப்படவில்லை.

ஒருபுறம் தொடர்ந்து அவன் படித்த பள்ளி நிர்வாகம், தங்கள் பள்ளியில் bullying என்னும் வம்புக்கிழுக்கும் பிரச்சினை இல்லை என மறுத்து வருகிறது.

ஆனால் சில மாதங்களுக்குமுன் ரயில் பயணி ஒருவர், ரயிலில் மாணவர்கள் மிக மோசமாக நடந்து கொள்வதைக் குறித்தும், மிக அதிக அளவில் வம்புக்கிழுத்தல் நடைபெறுவதைக் குறித்தும் பள்ளியை எச்சரித்துள்ளதைக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தந்தை, ஒரு மாணவன் தலையில் தாக்கப்படுவதையும், ஒரு 12 வயது மாணவியிடம் சிலர் அவளது பாலினம் குறித்து கேள்வி எழுப்பியதையும் கண்ணால் கண்டதாக தெரிவித்துள்ளார்.

பெயர் வெளியிட விரும்பாத இரண்டு குழந்தைகளின் தந்தையான அந்த பொறியாளர், பள்ளியில் மிக மோசமான வம்புக்கிழுத்தல் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் பள்ளி நிர்வாகத்தைப் பொருத்தவரையில், தங்கள் கடமை பள்ளி வாசலுடனேயே முடிந்து விடுவதாக கருதுகிறார்கள் என்கிறார்.

பள்ளி விழித்துக் கொள்வதற்கு ஒரு மாணவன் தனது உயிரைக் கொடுக்க வேண்டியதாயிருந்திருக்கிறது என்னும் அந்த தந்தை, அந்த பள்ளிக்கு அனுப்பியுள்ள இமெயில் ஒன்றில், தப்பித் தவறிக்கூட எனது பிள்ளைகளை உங்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்