கண்டெய்னர் லொறியின் பின்புற கதவைத் திறந்த ஓட்டுனர்: அங்கு அவர் கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய நெடுஞ்சாலை ஒன்றில் செல்லும்போது லொறிக்குள் ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து கண்டெய்னர் லொறியின் பின்புறக் கதவைத் திறந்த ஓட்டுநர் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

Kent பகுதியில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லொறி ஒன்றினுள் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த ஓட்டுநர், லொறியை நிறுத்தியுள்ளார்.

அவருடன் இன்னொரு ஓட்டுநரும் சேர்ந்து கொள்ள, லொறியின் ஓட்டுநர் அதன் பின்புறக்கதவைத் திறந்துள்ளார்.

அவருக்கு பின்னால் நின்ற காரிலிருந்த டேஷ்கேமில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. அந்த லொறி கதவை அவர் திறக்கவும் உள்ளேயிருந்து ஒரு நபர் குதிக்கிறார்.

திகைத்துப் போன லொறி ஓட்டுநர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் குதிக்கிறார்.

ஆக மொத்தம் மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும் லொறிக்குள் இருந்து குதித்து அங்கிருந்து ஓடி மறைகிறார்கள்.

அதில் சிலர், கூலாக பின்னால் நிற்கும் காரில் இருப்பவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள்.

கோபத்தில் லொறியின் கதவை அறைந்து சாத்துகிறார் ஓட்டுநர். அந்த ஐந்து பேரும் புலம்பெயர்ந்தோர் என்று தோன்றுகிறது.

ஆனால், அவர்கள் எங்கிருந்து ஏறினார்கள் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியாத நிலையில், பொலிசாருக்கும் உள்துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers