கர்ப்பிணிப்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற நபர் வழக்கில் புதிய தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் கர்ப்பிணிப்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற நபர் அவரது முன்னாள் காதலர் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவர் எதற்காக கொலை செய்தார் என்ற விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.

எட்டு மாத கர்ப்பிணியான Kelly Mary Fauvrelle, லண்டனில் தனது வீட்டிலிருக்கும்போது Aaron McKenzie(25) என்னும் நபர் அவரைக் கத்தியால் குத்தினார்.

Kelly சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, விரைந்து வந்த மருத்துவர் குழுவினர் அவரது வயிற்றிலிருந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Riley என்று பெயரிடப்பட்டிருந்த அந்த குழந்தை நான்கு நாட்களுக்குப்பின் உயிரிழந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Aaron, Kellyயின் மரணத்திற்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சமபவத்தின் போது Kellyயின் தாய், சகோதரி, சகோதரியின் மகன் என அவரது குடும்பத்தினர் பலர் அந்த வீட்டில் இருந்த நிலையில், இந்த சம்பவம் எப்படிநடந்தது என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட Aaron விசாரணைக்குட்படுத்தப்படுவதற்கு முன் அவருக்கு மன நல பிரச்சினைகள் ஏதேனும் உள்ளனவா என்று பரிசோதிக்கப்பட உள்ளது.

அடுத்து அக்டோபர் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கும்

Aaron மீதான வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடங்க உள்ளது. அதுவரை Aaron பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers