லண்டனில் தீவிரவாதிகளை துணிச்சலாக துடைப்பத்துடன் விரட்டிய பேக்கர்கள்: வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள்

Report Print Basu in பிரித்தானியா

லண்டன் பிரிட்ஜ் தீவிரவாதிகளை நிராயுதபாணியாக எதிர்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுடன், வியக்க வைக்கும் வகையில் விரட்டிச்சென்ற பேக்கரி வேலை செய்யும் நபர்களின் புதிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஆம் அண்டு ஜூன் 3ம் திகதி பிரித்தானியா தலைநகர் லண்டன் பிரிட்ஜில், குராம் பட், 27, ரச்சிட் ரெடூனே, 30, மற்றும் யூசெப் ஜாக்பா, 22, ஆகியோர் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர், 48 பேர் காயமடைந்தனர். இறுதியில் தாக்குதல் ஈடுபட்ட நபர்களை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் தொடர்பான புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆயுதங்களுடன் கண்ணில் பட்வர்களை கொல்ல துடிக்கும் தீவிரவாதிகளின் அருகே, நிராயுதபாணியாக பார்டோஸ் டோர்ஜெவ்ஸ்கி என்ற பொலிஸ் அதிகாரி செல்கிறார்.

பின்னர், மார்க்கெட்டில் புகுந்த தீவிரவாதிகளை பின்னாலயே ஆயுதம் ஏதும் இல்லாமல் பொலிஸ் குழுவினர் விரட்டிச் செல்கின்றனர். பொலிசாருக்கு உதவியாக பிளாஸ்டிக் குச்சி மற்றும் துடைப்பம் ஏந்திய படி இரண்டு பேக்கர்களும் உடன் செல்கின்றனர்.

இறுதியில் தீவிரவாதிகளை பிடித்த பொலிசார் கைவிலங்கு போட்டுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தீவிரவாதிகள் மூவரும் சட்டப்படியே சுட்டுக்கொல்லப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...