அண்ணனின் குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுத்த தங்கை.. காரணம்?

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் தங்கை ஒருவர் தனது அண்ணனின் குழந்தையை கருவில் சுமந்து பெற்றேடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கும்ப்ரியாவைச் சேர்ந்த 27 வயதான சேப்பல் கூப்பர் என்ற பெண்ணே இவ்வாறு செய்துள்ளார். கூப்பர் கணவனை பிரிந்து தனது ஐந்து வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

30 வயதான சேப்பல் கூப்பரின் சகோதரர் ஸ்காட் மற்றும் 29 வயதான அவரது துணை மைக்கேலும், குழந்தை ஒன்றை தத்தெடுக்க அல்லது வாடகை தாய் மூலம் பெற்றேடுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்த இரண்டிற்கும் செலவு அதிகமாகும் என்பதால் சேப்பல் கூப்பர் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

ஆதாவது, தானே வாடகை தாயாக மாற முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, மைக்கேலின் உதவியுடன் கருவை சுமந்த சேப்பல், தனது சகோதரரின் குழந்தையை பெற்றேடுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைக்கு ஹார்பர் எலிசபெத் ஸ்மித் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேப்பல் கூறியதாவது, நான் எப்போதும் அவளை என் சொந்தமாக நேசிப்பேன். ஆனால் நான் அம்மாவின் பாத்திரத்தை ஏற்க மாட்டேன். நான் எலிசபெத் ஸ்மித்திற்கு பிடித்த ஆண்ட்டியாக இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

சேப்பல் எங்களுக்கு அளித்த பரிசு விவரிக்க முடியாதது, இது ஒரு மறக்க முடியாது நிகழ்வு என சகோதரர் ஸ்காட் கூறியுள்ளார். மேலும், ஸமித்க்கு தனது பிறப்பு குறித்த உண்மை கண்டிப்பாக கூறுவோம்.

மைக்கேலும் நானும் அவளுடைய முழு மற்றும் சட்டபூர்வமான பெற்றோர்களாக இருப்போம். சேப்பலுடன் எந்த தாய்வழி உறவையும் தொடர அவளுக்கு எந்த காரணமும் இருக்காது என ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்