பிரித்தானியாவில் நடந்த பயங்கரம்! ரயிலில் பாய்ந்து மாணவன் தற்கொலை- புகைப்படம் வெளியானது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய சிறுவன் ஒருவன் தனது புத்தகப்பையை தனது நண்பனிடம் கொடுத்துவிட்டு ரயில் முன் விழுந்து இறந்த சம்பவத்தைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

நேற்று முன்தினம் பிரித்தானியாவின் Surreyயிலுள்ள Chertseyயில் Sam Connor என்னும் 14 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, தனது நண்பன் ஒருவனிடம் தனது மொபைல் போனையும் புத்தகப் பையையும் கொடுத்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் படுத்திருக்கிறான்.

வேகமாக வந்த ரயில் அவன் மீது ஏற, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான் அவன்.

அவன் படிக்கும் Salesian Secondary School என்னும் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், அவன் வம்புக்கிழுக்கப்பட்டதாக (bullying) தெரிவிக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் அதை மறுத்துள்ள நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அவன் கைப்பட எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

பள்ளி திறந்து நான்கே நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...