உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி: ஒரு ரசிகையின் ரியாக்‌ஷன்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வென்றதை விளையாட்டு மைதானத்திலிருந்து ரசிகர்கள் கொண்டாட, வீட்டிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி ஒருவர் இங்கிலாந்து வெற்றி

பெற்றதற்கு காட்டும் அழகிய ரியாக்‌ஷன் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவை அந்த மூதாட்டியின் பேத்தியான Gwen என்பவர் ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய, 900,000 பேருக்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளார்கள்.

அந்த வீடியோவின் கீழ், எனது பாட்டி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வென்றதைக் கொண்டாடுவதை பார்த்து ரசியுங்கள் என்று எழுதியுள்ளார்.

அந்த வீடியோவில் குழந்தை போல கைதட்டி குதூகலிக்கும் அந்த மூதாட்டி, முதலில் பேட்ஸ்மேன் அவுட்டாகி விட்டார் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டு, பின்னர், இங்கிலாந்து வெற்றி பெற்றதை உணர்ந்து கைதட்டி சிரிக்கிறார்.

அவரது பேரன் அவரருகே வந்து அவரைக் கட்டியணைத்து முத்தமிட, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஜார்ஜ், என்று மகிழ்ச்சி பொங்க குதூகலிக்கிறார் அந்த பாட்டி.

வெகு நேரத்திற்கு அவரால் தனது மகிழ்ச்சியை அடக்க இயலாமல் அவர் சிரிப்பதை அந்த குடும்பமே ரசித்துப் பார்க்கிறது.

இந்த வீடியோவுக்கு பலவித கமெண்ட்கள் வந்துள்ள நிலையில், ஒருவர், அந்த அறையிலேயே அவர் ஒருவர்தான் நார்மலாக நடந்து கொள்கிறார் என்று எழுதியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers