உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றதை லண்டன் மக்கள் எப்படி கொண்டாடினார்கள் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்ற தருணத்தை நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து கொண்டாடிய நிலையில் அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து எதிர்கொண்டது.

பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து உலகக்கோப்பை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் இந்த இறுதி போட்டி லண்டனில் உள்ள Trafalgar Square-ல் பெரியதிரையில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை பல்லாயிரக்கணக்கானோர் நின்று பார்த்தனர்.

அப்போது இங்கிலாந்து வெற்றி பெற்ற தருணத்தின் போது அங்கிருந்த மக்கள் தங்கள் அணி வெற்றியை நடனமாடி துள்ளிகுதித்து ஆனந்த கண்ணீர் கலந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

அதே இடத்தில் கொண்டாட்டத்தின் உச்சமாக ஆண்கள் தங்கள் சட்டை மற்றும் பேண்டை கழட்டி விட்டு உள்ளாடையும் கைகளை தூக்கி உயர்த்தி ஆட்டம் போட்டார்கள்.

லண்டனில் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களில் சாலைகளில், பப்களில் மக்கள் தங்கள் அணி வெற்றி பெற்றதை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜானி பெனட் என்ற ரசிகர் கூறுகையில், இந்த தருணத்தை என்னால் நம்பமுடியவில்லை, இந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers