லண்டனில் பதற்றம்..! மக்கள் கூட்டத்தில் அதிவேகத்தில் புகுந்த கார்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தலைநகர் லண்டனில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு லண்டன், பாட்டர்ஸியாவில் உள்ள லோம்பார்ட் சாலையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இத்தாக்குதலில், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், பலரது கால் உடைந்துள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மூன்று ஆண்கள் கொலை முயற்சி மற்றும் மற்றொரு நான்கு பேர் சம்பவ இடத்தில் சண்டையிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த விபத்து ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers