அவள் எனக்கு இல்லையென்றால் உனக்கும் கிடைக்கமாட்டாள்: மனைவியை கொன்று காதலனுக்கு செய்தி அனுப்பிய கணவன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது மனைவி இன்னொரு நபருடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த கணவர் அவளைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, அவளது காதலனுக்கு, அவள் எனக்கு இல்லையென்றால் உனக்கும் கிடைக்கமாட்டாள், அவள் இறந்துவிட்டாள் என்று செய்தி அனுப்பியுள்ளார்.

பிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த Phillip Gyde (58), தனது மனைவியான Susan (52) வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்.

Susan அந்த நபருக்கு ஆபாச செய்திகள் அனுப்பியதை கையும் களவுமாக கண்டுபிடித்த Phillip, அவரது மொபைலை டாய்லெட்டில் போட்டு விடுவதாக கூற, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அந்த சண்டையின்போது தனது மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் Phillip.

மனைவியைக் கொன்றுவிட்டு உறவினர்களுக்கு போன் செய்து தகவல் கூற, அவர்கள் பொலிசாரை அழைத்துள்ளனர்.

பொலிசார் வந்து Phillipஐ கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், நான் அவளை மிகவும் நேசிக்கிறேன், அவளை இழக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறி விம்மி விம்மி அழுவதைக் காணலாம்.

Phillip தனது மனைவியைக் கொலை செய்யும்போது அவர்களது மகன் பக்கத்து அறையில் நடந்ததை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

தனது மனைவியைக் கொலை செய்த Phillipக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 19 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers