மகாராணியாருடன் ஒரு அபூர்வ செல்பி: யார் அந்த அதிர்ஷ்டசாலி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மகாராணியாருடன் செல்பி எடுக்கும் பாக்கியம் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்துள்ளது.

அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா? அவர் ஒரு மருத்துவர்.

கேம்பிரிட்ஜிலுள்ள Royal Papworth மருத்துவமனைக்கு மகாராணியார் சென்றிருந்தபோது, அங்கு பணிபுரியும் Jason Ali என்னும் மருத்துவருக்குதான் அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

மகாராணியார் வரும்போது பணியிலிருந்த Jason Ali, எப்படியும் மகாரணி இந்த வழியாக வருவார், ஒரு செல்பி எடுத்து விடலாம் என கெமராவை ஆங்கிள் பார்த்து வைத்து தயாராக நிற்க, சொல்லி வைத்தாற்போல், மகாராணியும் கெமராவைப் பார்த்து ஒரு புன்னகை பூக்க, அற்புதமான ஒரு செல்பி அவருக்கு கிடைத்துள்ளது.

ஏதோ, தானும் மகாராணி போகிற வழியில் நிற்பதுபோல் ஒரு புகைப்படம் கிடைக்கும் என்று எண்ணியிருந்த Jason Aliக்கு, மகாராணியாரே புன்னகையுடன் போஸ் கொடுக்கும் ஒரு அபூர்வ செல்பி கிடைத்ததை நம்ப முடியவில்லை.

என்றாலும், மகாராணியாருடன் செல்பி எடுத்த முதல் நபர் Jason Ali அல்ல! ஏனென்றால், 2014இல் Belfastஇலுள்ள St George's Marketக்கு சென்றிருந்தபோது, எதிர்பாராமல் ஒரு செல்பிக்குள் சிக்க நேர்ந்தது மகாராணிக்கு.

Jack Surgenor என்னும் 14 வயது சிறுவன், மகாராணி செல்லும் வழியில் திடீரென குனிந்து ஒரு செல்பி எடுக்க, மகாராணியாரின் பாதுகாவலர்களுக்கு கிலி பிடித்தது.

மகாராணி மட்டுமின்றி இளவரசர் சார்லஸ், வில்லியம், கேட் என ராஜ குடும்ப உறுப்பினர்கள் பலரும் எதிர்பாராத செல்பிக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்