பிரித்தானியாவில் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் அடையாளம் தெரிந்தது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றியிருந்த ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது காணாமல் போன செஃப் ஒருவரின் உடல் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபரின் பெயர் Hiran Chauhan (24) என்றும், அவர் Salfordஇலுள்ள Seedleyயைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம், அவரது உடல், மரங்கள் அடர்ந்த ஒரு இடத்தில் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டு கிடந்ததைக் கண்ட பள்ளிச் சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில் பொலிசார் தடயவியல் நிபுணர்களுடன் அங்கு விரைந்தனர்.

Manchesterஇல் உள்ள El Capo உணவகத்தில் பணியாற்றும் Chauhan, பணி முடிந்து வீட்டுக்கு திரும்பவில்லை.

ஜூலை 2ஆம் திகதி இரவு 10.30க்கு பணி முடித்து நண்பர் ஒருவருடன் வீட்டுக்கு புறப்பட்ட Chauhan, வீடு வந்து சேரவில்லை.

அவரும் அவரது நண்பரும் மெக் டொனால்ட் உணவகம் ஒன்றிற்கு சென்ற பின் பல ட்ராம்களில் ஏறி பயணித்திருக்கின்றனர்.

CCTV கெமரா ஒன்றில் ஒரு ட்ராமிலிருந்து இரவு 11.30 மணியளவில் இறங்குவது பதிவாகியுள்ளது.

ஆனால் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், Chauhanஐக் கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 32 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்