பிரித்தானிய விமான கழிப்பறைக்குள் சென்ற இளைஞர் செய்த மோசமான செயல்.. சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in பிரித்தானியா
527Shares

பிரித்தானிய விமானத்தில் உள்ள கழிப்பறையில் புகைப்பிடித்த நபருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் கிரைக் முல்வனி (31). எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் இவர் இரண்டு மாதங்கள் வேலை விடயமாக டென்மார்க்கு சென்றார்.

பின்னர் டென்மார்கிலிருந்து மான்செஸ்டர் செல்லும் விமானத்தில் கிரைக் ஏறினார்.

விமானத்தில் மது அருந்திய கிரைக், அங்கிருந்த கழிப்பறைக்குள் சென்றார்.

பின்னர் அங்கு புகைப்பிடித்துள்ளார். இதை தொடர்ந்து கழிப்பறையில் இருந்து புகை வெளியில் வருவதை ஊழியர்கள் கிரைக் அவர் புகைப்பிடிப்பதை கண்டுபிடித்தனர்.

2016 Air Navigation உத்தரவின்படி விமானத்தில் புகைப்பிடிப்பது குற்றமாகும் என்ற நிலையில் விமானம் பிரித்தானியாவுக்கு வந்த பின்னர் கிரைக் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது, அப்போது இரண்டு மாதங்கள் கழித்து ஊருக்கு திரும்பியதால் உற்சாக மிகுதியில் புகைப்பிடித்துவிட்டதாக மன்னிப்பு கோரினார்.

மேலும் இதுபோல இனி நடந்து கொள்ளமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து £550 மற்றும் தனியாக £140 என அவருக்கு மொத்த £590 அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரைக் செய்த குற்றத்துக்கு £2,500 என்ற அளவில் கூட அபராதம் விதிக்கப்படலாம் என்ற நிலையில் அவருக்கு குறைவாகவே விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்