மனைவி இல்லாமல் தனியாக ஹொட்டலில் தங்கிய நபர்.. விளையாட்டாக செய்த செயலால் பறிபோன உயிர்

Report Print Raju Raju in பிரித்தானியா
465Shares

பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியில் உள்ள ஹொட்டலில் தங்கிருந்த நிலையில் தவறுதலாக அவர் கழுத்தை கயிறு இறுக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் லுக் மேரி (34). இவர் தொழில் விடயமாக ஜேர்மனியின் பிரங்க்பர்டுக்கு வந்தார்.

அங்குள்ள ஒரு ஹொட்டலில் ஏப்ரல் 3ஆம் திகதி அவர் தங்கியிருந்தார்.

4ஆம் திகதி காலையில் ஹொட்டல் அறையை காலி செய்வதாக லுக் கூறியிருந்த நிலையில் அவர் அறையில் இருந்து வெளியில் வராமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் மதியம் லுக் இருந்த அறை கதவை தட்டியும் அவர் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது படுக்கையறை அருகில் லுக் இறந்து கிடந்தார்.

அவர் கழுத்தில் கயிறு முடிச்சு போட்டிருந்ததற்கான அடையாளம் இருந்ததோடு, அருகில் கயிறு மற்றும் கத்தியும் இருந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் லுக் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது விசாரணையின் முடிவு வெளியாகியுள்ளது, அதில் லுக் இறப்பில் யாருக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது.

மேலும், அவர் தவறுதலாகவோ அல்லது விளையாட்டாகவோ கழுத்தில் கயிறை கட்டி கொண்ட நிலையில் அது அவர் கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளார்.

இது குறித்து பிரித்தானியாவில் உள்ள லுக் மனைவி லீனா கூறுகையில், சம்பவம் நடந்த அன்று வீடியோ காலில் என்னுடனும் எங்கள் குழந்தைகளுடனும் லுக் பேசினார்.

அப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், புதிதாக தொடங்கவுள்ள தொழில் குறித்து விரிவாக பேசினார், அவர் உயிரிழந்தது மிகவும் வேதனையளித்தாலும், அவர் வேண்டுமென்றே தற்கொலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்