நடுவானில் போதையில் பிரித்தானியர்கள் செய்த செயல்.. நரகமாக மாறிய விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின், மான்செஸ்டரில் இருந்து குரோஷியாவின், ஜாதருக்கு பயணித்த விமானத்தில் பிரித்தானியர்கள் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரையன்ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இருந்த அனிடா ஜுகோவ், 24, மற்றும் காதலன் பியோட்ர் நேசன், 32, ஆகியோர் விமானத்தில் இடம்பெற்ற சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

அதில், குழுவாக மது அருந்தி போதையில் பயணித்த பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர்கள், விமானத்தில் வாந்தி எடுத்து, சீட் பெல்ட் அணியாமல் பயணித்து, விமானக் குழுவினருடன் கத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பயணம் குறித்து ஜூகோவ் கூறியதாவது, விமானத்தில் பயணித்த 3 மணிநேரம் நகரத்தில் இருந்தது போல் இருந்தது. அவர்கள் அனைவரும் மிருகங்கள் போல நடந்துக்கொண்டனர். இசை இல்லாத இரவுகிளப் போல இருந்தது. என் வாழ்கையிலேயே மிக மோசமான விமான அனுபவம் இது தான் என தெரிவித்துள்ளார்.

போதை பிரித்தானியர்கள் மூலம் விமானம் தாமதமாக தரையிறங்கிய நிலையில், விமானத்திற்குள் நுழைந்த குரோஷியா பொலிசார், ரகளையில் ஈடுபட்ட மூன்று பிரித்தானியர்களை கைது செய்ததாக ரையன்ஏர் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்