இந்திய சிகரத்தில் பனியில் புதைந்து பலியான பிரித்தானியர்களின் இறுதி நிமிட வீடியோ வெளியானது

Report Print Basu in பிரித்தானியா

இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரமான நந்தாதேவி சிகரத்தின் பனிச்சரில் சிக்கி உயிரிழந்த மலையேறும் குழுவினரின் இறுதி நிமிடங்கள் அடங்கிய வீடியோவை இந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் உயரமான சிகரமான நந்தாதேவி சிகரத்தின் மீது ஏற முயன்ற 8 மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவினர், கடந்த மே 26ம் தேதி காணாமல் போயினர். பல வாரங்கள் தேடுதலுக்கு பிறகு 7 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டது. ஆனால், பிரித்தானியாவை சேர்ந்த மலையேறும் ஜம்பவானும், வழிகாட்டியுமான மார்டின் மோரனை இன்னும் காணவில்லை.

கடந்த யூன் மாதம் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் வைத்து பனிக்குள் புதைந்த இருந்த நிலையில் கமெரா ஒன்றை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர். அதில், பதிவாகியிருந்த வீடியோவை இந்தோ-திபெத்திய எல்லை பொலிஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த வீடியோவில், நான்கு பிரித்தானியர்கள், இரண்டு அமெரிக்கார்கள், ஒரு அவுஸ்திரேலியர் மற்றும் இந்தியர் ஒருவர் மெதுவாக வெயில் காலநிலையில் பெயரிடப்படாத சிகரத்தை நோக்கி முன்னேறிய செல்வதைக் காட்டுகிறது.

மலையேறும் குழுவின் எடை காரணமாக பனிப்பாறையில் விரிசல் ஏற்பட்டு, அதன் மூலம் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என இந்தோ-திபெத்திய எல்லை பொலிஸ் செய்தி தொடர்பாளர் விவேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீடியோவின் மூலம் என்ன தவறு எற்பட்டது என்பதை ஆய்வு செய்ய உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...