பேய் ஓட்டுவதாக கூறி மருத்துவர் செய்த காரியம்: உயிருக்கு போராடும் செவிலியர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த மருத்துவர் ஹோசம் மெட்வாலி, இளவரசி டயானா ஆஃப் வேல்ஸ் மருத்துவமனை, ஸ்கந்தோர்ப் பொது மருத்துவமனை மற்றும் உள்ளூர் கிளினிக்குகளில் மயக்க மருந்து மற்றும் வலி மருத்துவ நிபுணராக பணியாற்றி பிரபலமானவர்.

இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கெல்லி வில்சன் (31) என்கிற செவிலியரை சந்தித்துள்ளார். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததை அடுத்து, கிரிம்ஸ்பியின் புறநகர்ப் பகுதியில் வீடு எடுத்து ஒன்றாக தங்கி வந்துள்ளனர்.

இருவரும் தங்கியிருந்த வீட்டிலேயே பாதியாக பிரித்து, லிங்க்ஸ் வலி கிளினிக் என்பதை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 2ம் திகதியன்று கெல்லி வில்சனுக்கு சடங்கு செய்வதாக கூறி, ஹோசம் மெட்வாலி ஒரு மர்ம பொருளை ஊசியில் செலுத்தியுள்ளார்.

இதனால் உடல்நிலை மோசமடைந்த கெல்லி வில்சனை, அவருடைய பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருடைய உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மோசமாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி ஹோசம் மெட்வாலி தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers