கர்ப்பிணி சிறுமியின் வாயில் சோப்பு நுரையை ஊற்றி கொடுமைப்படுத்திய குடும்பம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் 17 வயது சிறுமியின் வாயில் சோப்பு நுரையை ஊற்றி வயிற்றிலிருந்த கருவை கலைக்க முயன்ற தம்பதிக்கு 21 ஆண்டுள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டனை சேர்ந்த ஹரிஃப் பியர்சன் (22) என்கிற இளைஞர் மூலம் 17 வயதான சிறுமி கர்பமடைந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட பியர்சன் அதனை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்து, தனக்கு குழந்தை வேண்டும் என பிடிவாதம் செய்துள்ளார். இதனால் கருவை எளிய முறையில் வேகமாக கலைப்பது எப்படி என செல்போனில் தேடிபார்த்த பியர்சன், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வடமேற்கு லண்டனின் ஹார்லெஸ்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் சிறுமியை அடைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் அவருடைய உறவு பெண்ணான கைடி மெக்கென்னா (22) வீட்டிற்கு வந்ததும், பியர்சனின் 16 வயது காதலியுடன் சேர்ந்து கொண்டு கர்ப்பிணியை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் சிறுமியின் உடலில் இருந்து ரத்தம் சிதறி சுவற்றில் படிந்துள்ளது. அந்த இரத்தம் தோய்ந்த முகத்தில் மதுவை ஊற்றியுள்ளனர்.

20 நிமிடங்கள் தொடர் தாக்குதல் நடத்திய பின்னர், தண்ணீர் கேட்டு சிறுமி அழ ஆரம்பித்துள்ளார். உடனே சோப்பு நுரையை கொடுத்து குழந்தையை கலைக்கும் முயற்சியில் 3 பேரும் ஈடுபட்டுள்ளனர்.

இனிமேல் குழந்தை கலைந்துவிடும் என நினைத்து அவர்கள் வெளியில் விட்டுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமியின் கரு கலையவில்லை. அவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, ஹரிஃப் பியர்சனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மெக்கென்னாவிற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தார்.

மேலும் பெயர் வெளியிடப்படாத 16 வயது சிறுமிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers