காதலி கிடைக்காத விரக்தியில் இளைஞர் செய்த ஆச்சர்யப்பட வைக்கும் காரியம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த ஷாஹான் மியா என்கிற 30 வயது இளைஞர் பலமுறை முயற்சி செய்தும் காதலி கிடைக்காததால், விரக்தியில் டேட்டிங் இணையதளம் ஒன்றினை துவங்கியுள்ளார்.

அதற்கான விளம்பரத்தினையும் ட்விட்டரில் துவங்கி தனக்கான காதலியை தீவிரமாக தேடி வருகின்றார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “எனக்கு ஒருபோதும் நீண்டகால உறவு அல்லது தீவிரமான காதலி எதுவும் இருந்ததில்லை. டேட்டிங் இணையதளங்களை நான் வெறுக்கிறேன்".

“அவை அனைத்தும் ஆளுமையை விட தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவை வெறும் ஹூக்-அப் தளங்கள் மற்றும் ஒரு இரவு நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன".

"நான் ஆசைப்படுகிறேன் என்று நான் கூறமாட்டேன், ஆனால் வாழ்க்கையில் குடியேறுவதற்காக ஒரு துணையை மிகவும் தீவிரமாக தேடுகிறேன்".

நான் பெரும்பாலும் வாழ்க்கையிலேயே அதிக கவனம் செலுத்தியதால் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் தற்போது எனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. அவருடன் சேர்ந்து வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்" எனக்கூறியுள்ளார்.

ஷாஹான் இணையதளம் துவங்கி ஒருவாரம் ஆகியிருக்கும் நிலையில் அவரை இதுவரை ஒருபெண் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers