டிரம்ப் திறமையற்றவர்..! அமெரிக்காவை எச்சரித்த பிரித்தானியா

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா தூதரிடமிருந்து வந்த மின்னஞ்சல்கள் கசிந்ததில், டிரம்ப் நிர்வாகம் தகுதியற்றது, பாதுகாப்பற்றது மற்றும் திறமையற்றது என்று வாஷிங்டனுக்கான பிரித்தானியா தூதர் முத்திரை குத்தியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் கீழ் வெள்ளை மாளிகை தனித்துவமாக செயல்படாது மற்றும் பிளவுபட்டுள்ளது என்று பிரித்தானியா தூதர் சர் கிம் டாரோச் கூறினார். ஆனால், இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதிக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மின்னஞ்சல்களில் வந்த மெமோக்கள் கசிந்தது மோசமான நடத்தை என்று பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் கூறியது, ஆனால் அவற்றின் துல்லியத்தை மறுக்கவில்லை என குறிப்பிட்டது.

மெமோக்களின் உள்ளடக்கங்கள் கசிந்ததற்கு வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை, ஆனால் இது அமெரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான சிறப்பு உறவை சோதிக்கக்கூடும் என சர் சிம் டாரோச் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தை நாங்கள் நம்பவில்லை, அது தகுதியற்றது, பாதுகாப்பற்றது மற்றும் திறமையற்றது என கடுமையாக விமர்சித்த பிரித்தானியா தூதர் சர் கிம் டாரோச். இந்த வெள்ளை மாளிகை எப்போதாவது திறமையானதாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...