பட்டாணி வாங்க கடைக்கு போனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்: பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திணறல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பட்டாணி வாங்க கடைக்கு சென்ற ஒரு பிரித்தானியர் தற்செயலாக லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்க, அதில் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழ, செலவு போக மீதிப்பணத்தை என்ன செய்வது என்று அவரும் அவரது மனைவியும் திணறிக் கொண்டிருக்கிறார்களாம்.

Sophie Richards (26), சமையல் செய்து கொண்டிருக்கும்போது பட்டாணி இல்லாததைக் கவனித்து, பட்டாணி வாங்கி வருமாறு தன் கணவர் William (33)க்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்,

பட்டாணி வாங்க கடைக்குச் சென்ற William, கடைசி நேரத்தில் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளார்.

அப்படி அவர் வாங்கிய சீட்டில் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழ, மகிழ்ச்சியில் மூழ்கிப்போயுள்ளார்கள் அந்த தம்பதியர்.

ஒரு கார், சொந்த தொழில், வீடு என அனைத்து தேவைகளையும் சந்தித்த பின்னரும் மீதியும் பணம் வர, என்ன செய்வது என்று யோசித்த தம்பதி கடைசியாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் பட்டாணி வாங்கப்போன இடத்தில் தம்பதிக்கு அதிர்ஷ்டம் அடித்த செய்தியைக் கேள்விப்பட்ட பலரும், தாங்களும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதற்காக பட்டாணி வாங்கி வருவதாக அவர்களுக்கு செய்திகள் அனுப்பி வருகிறார்களாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers