எண்ணெய் கப்பல் விவகாரம்: பிரித்தானியாவிற்கு மிரட்டல் விடுத்த ஈரான்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஈரானிய எண்ணெய் கப்பலை பிரித்தானியா விடுவிக்கவில்லை என்றால், அதற்கு பதிலடி கொடுப்போம் என ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார்.

வியாழக்கிழமையன்று ஈரானிய எண்ணெய் கப்பல், ஐரோப்பிய ஒன்றிய தடைகளை மீறி சிரியாவிற்கு கச்சா எண்ணெயை கொண்டு சென்றதாக, சந்தேகத்தின் பேரில் ஜிப்ரால்டரில் தடுத்து வைக்கப்பட்டது.

இதனால் ஈரான் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த வேளையில், அமெரிக்கா கோரிக்கையின் பேரிலே இந்த சிறைபிடிப்பு நடத்தப்பட்டதாக ஸ்பெயின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டார்.

அதேசமயம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எண்ணெய் கப்பல் விவகாரத்தை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், ஈரான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்கு என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என வெள்ளை மாளிகையில் இன்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி மொஹ்சென் ரெஸாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஈரானிய எண்ணெய் கப்பலை பிரித்தானியா விடுவிக்கவில்லை என்றால், ஒரு பிரித்தானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றுவது எங்கள் அதிகாரிகளின் கடமையாகும்"

"இஸ்லாமிய ஈரான் அதன் 40 ஆண்டுகால வரலாற்றில் எந்தவொரு போரிலும் ஒருபோதும் விரோதத்தைத் துவங்கியதில்லை. ஆனால் கொடுமைப்படுத்துபவர்களுக்கு பதிலடி கொடுப்பதில் ஒருபோதும் தயங்கியதில்லை" என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers