இலங்கை குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு செல்லப் போகிறேன்! பிரித்தானியா இளைஞன் கண்ணீர்

Report Print Santhan in பிரித்தானியா

இலங்கை குண்டு வெடிப்பில் தன்னுடைய சகோதரர்களை பறிகொடுத்த அண்ணன் மிகுந்த வேதனையுடன் அவர்களின் இறப்பை பற்றி மிகுந்த வேதனையுடன் இருப்பதாகவும், அதிலிருந்த் மீள்வதற்காக இலங்கை செல்லவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் காரணமாக 8 பிரித்தானியார்கள் உட்பட 258 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதில் பிரித்தானியாவைச் சேர்ந்த Daniel Linsey என்ற 19 வயது இளைஞரும், Amelie என்ற 15 வயது சிறுமியும் அடங்குவர்.

இந்நிலையில் தன்னுடைய இந்த இரண்டு சகோதர்களை பறிகொடுத்து நிற்கும் டேவிட் என்பவரிடம் பிரபல ஆங்கில ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.

அதில், இலங்கைக்கு என்னுடைய தந்தை மேத்யூ மற்றும் சகோதர்கள் சென்றிருந்தனர். அப்போது இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

இதில் சமீபத்தில் தான் என் சகோதர்களின் ஆடைகள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் Daniel Linsey-வின் உடை பார்க்கவே மிகவும் மோசகாம இருந்தது. சகோதரியான Amelie-ன் நீல நிற உடையில் இரண்டு ஓட்டைகள் இருந்தன.

இன்னும் நான் அதிலிருந்து மீளவில்லை, இதனால் சம்பவம் நடந்த கொழும்புவின் சங்கிரில்லா ஹோட்டலுக்கு சென்று வர திட்டமிட்டிருக்கிறேன், அப்போது தான் என்னுடை மன அழுத்தம் சரியாகும் என்று நினைப்பதாக கூறியுள்ளார்.

இதில் அவரின் தந்தை காயங்களுடன் உயிர் தப்பினார். அதன் பின் அவர் இந்த சம்பவத்திற்கு பின் அவரின் தந்தை Daniel Linsey மற்றும் Amelie பெயரில் நிதி திரட்ட முடிவு செய்தார்.

அதன் படி அவர்களுக்கு 170,000 பவுண்ட் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும், இதை வைத்து இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு டேவிட் உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers