அவர் மீது தீராத காதல்... மறுமணத்திற்கும் தயாரான இளவரசி டயானா: வெளிவரும் புதிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் சார்லசுடன் விவாகரத்து பெற்றிருந்தாலும் அவர் மீதான காதலும் அன்பும் இளவரசி டயானாவுக்கு இறக்கும்வரை குறையவில்லை என அரச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

நீண்ட 15 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் 1996 ஆம் ஆண்டு பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா தம்பதி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

இருப்பினும், இளவரசி டயானாவுக்கு சார்லஸ் மீதான காதல் சற்றும் குறையவில்லை என அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

வாய்ப்பு அமைந்தால் தாம் மீண்டும் இளவரசர் சார்லசை மறுமணம் செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாக இளவரசி டயானா தமது விருப்பத்தை சூசகமாக தெரிவித்திருந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

பாரிஸ் நகரில் அவர் வாகன விபத்தில் சிக்கும் வரை, சார்லஸ் மீதான டயானாவின் காதல் நீடித்தது என கூறும் அவர்,

இதனால் டயானா இளவரசர் சார்லசுக்காக ஏங்கினார் என்பது அல்ல பொருள் எனவும் டயானாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டெப்பி பிராங்க் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், விவாகரத்துக்கு பின்னர் நண்பர்களுடனான இரவு விருந்து ஒன்றில் தமது பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஹரி தொடர்பில் வாய் நிறைய பேசிய டயானா,

சார்லஸ் குறித்து பேசும் போது அவர் முகத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி நிழலாடியது என Petronella Wyatt என்ற பெண்மணி வெளிப்படுத்தியுள்ளார்.

தமது வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ வாய்ப்பு அமைந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, முறிந்த எனது திருமணத்தை மீண்டும் ஒருமுறை செய்து கொள்வேன் என டயானா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளதாக Kerry Packer என்பவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சார்லசுடன் இருந்த காதலும் ஈர்ப்பும் கடைசி வரை டயானா தமது உள்ளத்தில் பாதுகாத்தார் என அவரது நண்பர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers