ஈரானுக்கு எதிராக பிரித்தானியாவை தூண்டிவிட்ட அமெரிக்கா: எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பால் பதற்றம்

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்காவால் கோரப்பட்டதாகக் கூறி, ஈரான் எண்ணெயை கொண்டு சென்ற டேங்கர் கப்பலை பிரித்தானியா சிறை பிடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பனாமா கொடியிடப்பட்ட, கிரேஸ் 1 என்ற சூப்பர் டேங்கர் கப்பல், போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் கடற்பகுதியான ஜிப்ரால்டரில் வைத்து அந்நாட்டு அதிகாரிகள் டேங்கர் கப்பலை சிறைபிடித்துள்ளனர். பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் கூட்டாக கப்பலை சிறைபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறி, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு ஈரானிய கச்சா எண்ணெயை கொண்டு செல்வதன் மூலம், டேங்கர் கப்பலை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தாக ஜிப்ரால்டரில் அதிகாரிகள் கூறினர். அதே நேரத்தில் ஸ்பெயினின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த நடவடிக்கையை அமெரிக்காவால் கோரப்பட்டதாகக் கூறினார்.

இந்த நடவடிக்கையை ஒரு வகையான கடற்கொள்ளை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் அப்பாஸ் மௌஸவி விமர்சித்துள்ளார். எவ்வாறாயினும், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரித்தானியா தூதர் ராபர்ட் மாகைருக்கு, டேங்கரை சட்டவிரோதமாக பறிமுதல் செய்தமை தொடர்பாக பதிலளிக்கும் படி சம்மன் அனுப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜிப்ரால்டரில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள டேங்கரை பிரித்தானியா உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் கோரி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...