உணவகத்தில் தவறான பொத்தானை அழுத்தியதால் பணம் கொடுக்காமல் ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள உணவகம் ஒன்றில் தவறான பொத்தானை அழுத்தியதால் 50க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்காமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.

லிவர்பூலின் சின்னமான ஆல்பர்ட் கப்பல்துறையில் உள்ள பனம் உணவகம் & பாரில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டதற்கான தவறான ஒலி எழுப்பப்பட்டது.

அந்த சமயத்தில் தங்களுடைய பாதுகாப்பிற்காக வாடிக்கையாளர்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அங்கிருந்த 50க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உணவு மற்றும் பானம் அருந்தியதற்கான பணம் கொடுக்காமல் ஓட்டம்பிடித்துள்ளனர்.

இதனை வேண்டுமென்றே சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் ஓட்டம்பிடித்து விட்டதாக உணவகம் நிர்வாகம் தற்போது புகார் கொடுத்துள்ளது.

இதனால் தங்களுக்கு 1000 டொலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்