பழைய தோழிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மேகன்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் விம்பிள்டன் தொடரில் செரினா வில்லியம்ஸ் பங்கேற்ற போட்டியில் திடீரென தோன்றி ரசிகர்ளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இளவரசி மேகன் குழந்தை பிறந்த பின்னர் மூன்றாவது முறையாக பொதுவெளியில் தோன்றியிருக்கிறார். தன்னுடைய குழந்தை ஆர்ச்சிக்கு வருகின்ற சனிக்கிழமை தனிப்பட்ட முறையில் பெயர் சூட்டும் விழாவை நடத்தவிருக்கிறார்.

இதில் ஹரி - மேகன் தம்பதியினருக்கு நெருக்கமான 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். குழந்தையின் ஞானப்பெற்றோர் குறித்து தகவலையும் தம்பதியினர் இன்னும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் இளவரசி தன்னுடைய கல்லூரி கால நெருங்கிய தோழிகள் லிண்ட்சே ரோத் மற்றும் ஜெனீவ் ஹில்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விம்பிள்டன் தொடரில் செரினா வில்லியம்ஸ் விளையாடும் போட்டியினை காண வருகை தந்துள்ளார்.

இதனால் இவர்களில் யாரேனும் ஒருவர் குட்டி இளவரசரின் ஞானப்பெற்றோர்களாக இருக்கலாம் என இணையதளவாசிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்