திருமணத்திற்கு தயாரான இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: அவரது இன்றைய நிலை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நாளில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

Norwichஐ சேர்ந்த Chloe Bailey (34)க்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அவரது காதலரான Harrison Bailey (32)உடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம், உடல் நலமின்றி மருத்துவமனைக்கு சென்ற Chloeவுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவர, அதிர்ந்து போனார்.

திருமணத்தை முடித்து விட்டு சிகிச்சையைத் தொடங்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டபோது, மருத்துவர்கள் உடனே சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, அவர் எப்போது திருமணம் என்று முடிவு செய்திருந்தாரோ, அதே மே மாதம் முழுவதும் அவருக்கு கதிரியக்க சிகிச்சையளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

பல மாதங்கள் திட்டமிட்டு, 12,000 பவுண்டுகள் செலவில் கரீபியன் தீவுகளில் நடத்த திட்டமிட்டிருந்த திருமணத்தை தள்ளிப்போட வேண்டிய கட்டாயம்.

எனது திருமண நாள் வந்தபோது, ஆலயத்தில் மணமகளாக நடைபோட வேண்டிய நான், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தேன் என்கிறார் Chloe.

ஆனால் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் சிகிச்சைகள் முடிந்து, இனி திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் அனுமதியளித்தபின் மீண்டும் திருமண கனவுகளில் மூழ்கினர் தம்பதியர்.

அதிரஷ்டவசமாக அவர்களது பயண ஏற்பாட்டாளர் முன்பு அவர்கள் எந்த திகதியில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார்களோ, அதே நாளில், அதே இடத்தில் ஆனால் ஓராண்டிற்கு பிறகு, திருமண ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

தற்போது பிரித்தானியாவில் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்ட Chloe, இன்னமும் தனக்கு அளிக்கப்பட்ட ஹார்மோன் சிகிச்சையின் தாக்கத்தை உணர்கிறார். அத்துடன், பிரித்தானியாவில் புற்று நோய் ஆய்வுகளுக்கு ஆதரவளித்து வருகிறார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...