பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும் ஹரி- மேகனின் செயல்! எச்சரிக்கும் பிரபலம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், குட்டி இளவரசர் ஆர்ச்சியின் படத்தை இதுவரை முழுமையாக காட்டாதது, ராஜ தம்பதியரின் ரசிகர்கள், அவர்கள் மேல் வைத்திருக்கும் ஆர்வத்தை இழக்க செய்யலாம் என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஹரியும் மேகனும், குட்டி இளவரசர் ஆர்ச்சியின் படத்தை முழுமையாக காட்டாமல், அவரது கால், கை, என உடல் பாகங்களை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தகைய செயல்கள் ராஜ தம்பதியின் மீதான ஆர்வத்தை, அவர்களது ரசிகர்கள் இழக்கச் செய்யலாம் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

Majesty பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான Ingrid Seward, கூறும்போது, மக்கள் இதுவரை நடந்ததுபோல், குட்டி இளவரசரின் புகைப்படத்தையும் முழுமையாக பார்க்கவே விரும்புகிறார்கள் என்கிறார்.

இதற்கிடையில் ஹரியும் மேகனும் தங்கள் மகனுடைய ஞானஸ்நான ஆராதனையை தனிப்பட்ட முறையில் பொதுமக்களின் பார்வையில் படாமல் நடத்துவதற்கும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Luke Pollard, எந்த பெற்றோருமே தங்கள் குழந்தை அமைதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் வளர்க்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

ஆனால் ராஜ குடும்பத்தினரைப் பொருத்தவரையில் இரண்டுமே சாத்தியமில்லை என்கிறார். அவர்களுக்கு பொதுமக்களின் பணம் வேண்டுமானால், அடுத்த தலைமுறை ராஜ குடும்ப வாரிசை மக்கள் பார்க்க விரும்பும்போது, அவர்களால் மறுக்க முடியாது என்கிறார் அவர்.

இதே விடயம் தொடர்பில், சமூக ஊடகங்களிலும் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒருவர், தனிப்பட்ட ஞானஸ்நானம், ஆனால் பொதுமக்களின் பணம்! என்று விமர்சிக்க, மற்றொருவர், தங்கள் மகனின் ஞானஸ்நான நிகழ்வை அவர்கள் தனிப்பட்ட முறையில் நடத்த விரும்பும்போது, ஹரி மேகனின் வீட்டை புதுப்பிக்க, எதற்காக மக்கள் 3 மில்லியன் செலவிடவேண்டும் என்கிறார்.

இன்னொருவர், நாங்கள் அவருக்காக பணம் செலவிடாத வரையில் எல்லாம் சரிதான், ஆனால் நாங்கள் உங்களுக்காக வரிப்பணம் செலுத்தும்போது உங்களால் அதை செய்ய முடியாது, நீங்கள் தனி குடிமக்கள் என்றால், பொதுமக்கள் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் என்கிறார் கோபத்துடன்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers