மாரத்தான் போட்டியில் எல்லைக்கோட்டிற்கு அருகே திடீரென மயங்கி உயிரிழந்த இளைஞர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மலேசியாவை சேர்ந்து இளைஞர், திடீரென மயங்கிவிழுந்து உயிரைவிட்டுள்ளார்.

வேல்ஸ் நாட்டில் ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 10,000 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் மலேசியாவை சேர்ந்த வில்சர்ன் ஓங் (20) என்கிற இளைஞரும் கலந்துகொண்டுள்ளார். ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் வில்சர்ன், எல்லைக்கோட்டை அடைய சிறிது தூரம் மட்டுமே இருந்த நிலையில் திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார்.

அதனை பார்த்த போட்டி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் அவருடைய உடலை அடையாளம் கட்டுவதற்காக, மலேசியாவிலிருந்து அவருடைய பெற்றோர் பிரித்தானியாவிற்கு விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், வில்சர்ன் குடும்பத்திற்கு தங்களுடையாய் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளது

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers