மண முறிவுக்குப்பின் மகனுக்கு விருந்து வைத்த தாய்: பின்னர் எடுத்த விபரீத முடிவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

திருமண வாழ்வு விவாகரத்தில் முடிய, இனி வாழ வேண்டாம் என முடிவெடுத்த ஒரு பெண் தனது மகனுடன் இணைந்து தனது வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரித்தானியாவை சேர்ந்த Emma Sillett (41) தனது மகன் Jenson Spellman (5)இடம் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து விவரித்தபின், அவனை அழைத்துக் கொண்டு மெக் டொனால்ட் உணவகம் சென்று மகனுக்கு அங்கு விருந்தளித்துள்ளார் .

பின்னர் இருவரும் Derbyshireஇலுள்ள Valehouse ஏரிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு தங்கள் முதுகுப் பைகளில் கற்களை நிரப்பிக் கொண்டு, தனது கையுடன் சேர்த்து மனது கையையும் Emma கட்டிய பின் இருவரும் ஏரியில் குதித்துள்ளனர்.

அவர்களைக் காணவில்லை என பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டபின் அவர்கள் Emmaவின் காரில் கடிதங்கள் சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றில் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிவித்திருந்த Emma, தான் இறந்து விட்டால் மகன் என்ன செய்வான் என அஞ்சி அவனையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்ததாக எழுதி வை த்துள்ளார்.

அத்துடன் தங்கள் உடல்களைக் எங்கு தேடுவது என்பதற்கான தடயங்களையும் விட்டுச் செல்வதாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி பொலிசார் தேடியபோது ஏரியின் அருகில் குழந்தையின் ஒரு பொம்மையும் டார்ச்சும் கிடைத்துள்ளன.

இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப்பின் Derbyshire ஏரியில் கைகள் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் இருவரது உடல்களும் கிடைத்துள்ளன.

ஏற்கனவே பல ஆண்டுகளாக மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்த Emmaவுக்கு மூன்று கருச்சிதைவுகளும் ஏற்பட்டிருந்த நிலையில், எல்லாவற்றையும் விட மண முறிவு அவரை அதிகம் பாதித்ததால், இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers