பெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா! ஜேம்ஸ்பாண்ட் படப்பிடிப்பில் சலசலப்பு

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நடந்து வரும் ஜேம்ஸ்பாண்ட படத்தின் படப்பிடிப்பின்போது, பெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரித்தானியாவில் நடைபெற்று வருகிறது. டேனியல் கிரேய்க் நடித்து இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வாரம் பக்கிங்ஹம்ஷயரில் உள்ள பைன்வுட் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது.

அப்போது பெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக ஸ்டுடியோ ஆட்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Getty Images

இந்நிலையில், இதுகுறித்து ஸ்டுடியோ நிர்வாகம் கூறுகையில், ‘இது போன்ற விடயங்களை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம். கமெரா சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளோம். மேலும் விசாரணையிலும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், கமெராவை வைத்ததாக பீட்டர் ஹார்ட்லி(49) என்ற நபரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, இதே பைன்வுட் ஸ்டுடியோவில் குண்டுவெடிப்பது போன்ற காட்சியை படமாக்கிய போது, படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார். அதன் பின்னர், ஜேம்ஸ் பாண்டாக இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும், மீண்டும் அவ்வாறு நடிப்பதற்கு பதில் கை நரம்பை அறுத்துக் கொள்வேன் என்றும் டேனியல் கிரேய்க் தெரிவித்தார்.

அச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரகசிய கமெரா விடயமும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers