கோடீஸ்வர கணவரின் மோசமான பழக்கம்.. விமானத்தில் பறந்து வந்து மனைவி செய்த செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரர் குடிபோதையில் ஜேர்மனி விமான நிலையத்தில் தனித்துவிடப்பட்டிருந்த நிலையில் அவர் மனைவி விமானத்தில் பறந்து வந்து அவரை மீட்டுள்ளார்.

வின்னி மூர் (54) என்பவர் பிரித்தானியாவில் வசிக்கும் பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார்.

அதிகளவில் மது குடிக்கும் பழக்கம் கொண்ட வின்னி அதனால் அடிக்கடி பல பிரச்சனைகள் மற்றும் சங்கடங்களை சந்திப்பதுண்டு.

குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட சில வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

இதன் காரணமாக வின்னி ஏழு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு 200 மணி நேரத்துக்கு எந்த சம்பளமும் பெறாமல் அவர் பணி செய்யவும் முன்னர் உத்தரவிடப்பட்டது இந்நிலையில் தனது மனைவி ஜார்ஜினாவுடன் வின்னி ஜேர்மனிக்கு சென்றார்.

அங்கிருந்து கடந்த வாரம் ஜார்ஜினா மட்டும் பிரித்தானியாவுக்கு திரும்பிய நிலையில் பணி விடயமாக வின்னி அங்கேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜேர்மனியின் Frankfurt விமான நிலையத்துக்கு முழு குடிபோதையில் வின்னி வந்த நிலையில் அங்கேயே விழுந்துள்ளார்.

இதை தொடர்ந்து அவரிடம் இருந்த பணம், பொருட்கள், கிரெடிட் கார்ட் உள்ளிட்டவைகளை யாரோ திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து ஜார்ஜினாவுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் கணவரை மீட்க விமானத்தில் பறந்து வந்தார்.

பின்னர் வின்னியை அழைத்து கொண்டு ஊருக்கு சென்றார் ஜார்ஜினா. இதனிடையில் வின்னியிடம் இருந்து திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்து டொரண்டோ மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மதுவில் இருந்து மீளுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்த வின்னி சில காலமாக மது குடிக்காமல் இருந்தார், பின்னர் ஜேர்மனிக்கு வந்த பின்னரே மீண்டும் மதுவை குடித்தார் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers