பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? நான்காவது சுற்று வாக்கெடுப்பு முடிவு வெளியானது

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பின் நான்காவது சுற்று முடிவு வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் தெரசா மே விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் 10 வேட்பாளர்கள் குதித்தனர். மூன்றாவது சுற்று முடிவு வெளியாகிய நிலையில் போரிஸ் ஜான்சன், ஜெர்மி ஹன்ட், மைக்கேல் கோவ் மற்றும் சஜித் ஜாவித் ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நான்காவது சுற்று வாக்குப்பதிவு நடைப்பெற்ற நிலையில் 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். நான்காவது சுற்று முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

நான்காவது சுற்று முடிவில் போரிஸ் ஜான்சன் 157 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து மைக்கேல் கோவ் 61, ஜெர்மி ஹன்ட் 59 வாக்குகள் பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

34 வாக்குகள் பெற்று கடைசி இடத்தை பிடித்த பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவத் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நான்காவது சுற்றில் 313 பேர் வாக்களித்த நிலையில் இரண்டு வாக்குகள் செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.

3 வேட்பாளர்கள் பங்கேற்கும் ஐந்தாவது சுற்று வாக்கெடுப்பும் இன்றே நடைபெறவுள்ளது. ஐந்தாவது சுற்று முடிவு இறுதி இரண்டு வேட்பாளர்களை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers